Posts

Showing posts from May, 2013

புகைப்பட ஹைக்கூ 30

Image
புகைப்பட ஹைக்கூ 30 பூவோடு சேர்ந்து குளித்தது பூ! வாடினால் வதங்கும் மனசு பூ! பூ வியாபாரம் கூடவே குழந்தைக்கு உபசாரம்! கொளுத்தும் வெயிலிலும் குளிர்விக்கிறது அன்னையின் அன்பு! வெயிலுக்கு கவசமானது தண்ணீர் குளியல்! வாட்டும் வெயிலில் வாடாமல் சிரித்தது குழந்தை! வாசமுடன் பாசமும் சேர்ந்தது பூக்காரியின் குழந்தை! குடும்பச் சுமையை குறைத்து வைத்தது குழந்தை! பாச ஊற்றீல் மூழ்கியது குழந்தை! உருக்கும் வெயிலில் பெருக்கெடுத்தது தாயின் பாசம்! பூக்கடையில் ஒரு விலையில்லா பூ! குழந்தை குளிப்பது நீரில்மட்டுமல்ல தாய்ப்பாசத்திலும்! வாசம் மணத்தது மல்லியில்! பாசம் மணத்தது பிள்ளையில்! வாடாமல் இருக்க ஈரமானது பூ! ஈரமான மனம் ஈரமானது பூ! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

யார் இந்த குயிலி?!

Image
இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம். தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொலைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது. அந்த போராளி வீரமங்கை யின் பெயர்தான் குயிலி. 1776ம் ஆண்டு வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார். குயிலி. அதுதான் அவள் பெயர். வயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு ந

புகைப்பட ஹைக்கூ 29

Image
 புகைப்பட ஹைக்கூ  29 நீர்ச் சிதறலில் நிறைந்து வந்தது மகிழ்ச்சி! குளிர்ச்சி தந்தது குழந்தைக்கு மகிழ்ச்சி! அக்னி வெயிலை அசைத்துப் பார்த்தது ஊற்று நீர்! கொளுத்தும் வெயிலில் கொண்டாட்டம் குழாய்குளியல்! புல்லுக்கு கொஞ்சம் பிள்ளைக்கு கொஞ்சம் பங்கிட்டு மகிந்தது குழாய்! எல்லையில்லா மகிழ்ச்சி! அள்ளித்தந்தது ஊற்றுநீர்! பீய்ச்சும் நீரில் பிணைந்தது பிஞ்சு! உடலைத் தழுவிய நீர் உருவாக்கியது உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி! மலையருவியில்லை! மழையுமில்லை! குழாயில் குளியல்! புல்லோடு சேர்ந்து குளித்தது இந்த பூ! சில்லென்ற தண்ணீரில் சிலிர்ந்து கொண்டு வந்தது சிரிப்பு! கோடை வெப்பம் குளித்து தணித்தது குழந்தை! வெயிலோடு விளையாடி நீரோடு நீராடும் குழந்தை! நீராடுகையில் நீராட்டம்! குழந்தை! நீர்த்திவலைகள் கிச்சுகிச்சு மூட்டின! சிரித்தது குழந்தை! சிக்கன குளியல் பாடம் சொல்லியது பாப்பா! தங்கள் வருகைக்கு நன்றி !பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

டி.எம்.எஸ் மறைவு! அஞ்சலி!

Image
தமிழ் திரையிசையில் தனக்கென  ஒரு தன்னிகர் இல்லாத இடத்தை பிடித்து அரை நூற்றாண்டு காலம் திரையிசையின் ஜாம்பவானாகத் திகழ்ந்த பிரபல பின்னனி பாடகர் டி.எம்.எஸ். இவரது  குரல்வளம் இனிமை அருமை, சிவாஜி, எம்.ஜி.ஆர். ஜெமினி என பல நடிகர்களுக்கு ஏற்றவாறு தன் குரலை வேறுபடுத்தி பாடி அந்த நடிகர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் என்றால் மிகையாகாது.                                                                                                                 91வயது நிரம்பிய பாடகர் டி.எம்.எஸ் சில நாட்களுக்கு முன் வீட்டில் வழுக்கி விழுந்ததில் அடிபட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுத் திணறல் அவரது உயிரை பறித்துவிட்டது. காலன் அவரது உயிரை பறித்தாலும் அவரது கானங்கள் என்றும் நம்மிடையே நிறைந்திருக்கும். அவரது காதல் ரசம் பாடும் டூயட்களும் தத்துவம் பாடும் பாடல்களும் பக்தி பாடல்களும் என்றும் அழியா இசைக் காவியங்கள்.                   அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இ

அரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!

Image
அரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்! விஜயபுரம் என்ற நாட்டில் ஓர் அடர்ந்த காடு இருந்தது. அந்த காலத்தில் காடுகளை பராமரித்து வந்தனர். அதில் விலங்குகளும் பறவைகளும் ஏராளமான தாவரங்களும் ஜீவித்து வந்தன. மன்னர்கள் பொழுது போக்கிற்காக கானகம் சென்று வேட்டையாடுதல் மீன் பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவர். மன்னர்களுடன் அவரது பரிவாரங்களும் கானகம் செல்லும். ஆனாலும்  காடு வளர்ந்து கொண்டுதான் இருந்தது.    விஜய புரம் காட்டில் திடீரென அரக்கன் ஒருவன் புகுந்துவிட்டான். அவன் முதலில் விலங்குகளை பிடித்து உண்டு கொண்டிருந்தான். பின்னர் மனிதர்களையும் பிடித்து உண்ண ஆரம்பித்துவிட்டான். இதனால் யாரும் காட்டிற்கு செல்லவே அஞ்சினர். மாதம் ஒரு முறை கானகம் சென்று வேட்டையில் ஈடுபடும் மன்னரும் வேட்டைக்கு செல்வது தடைபட்டது.    அரக்கன் மிகுந்த பலசாலியாகவும் மனிதர்களையே உண்பவனாக இருந்ததாலும் அவனை வெற்றி பெறுவது எளிதான காரியமாக இல்லை! அரக்கனுடன் போரிட்ட பலர் மாண்டு போயினர்.நாளுக்கு நாள் அரக்கனின் அட்டகாசம் அதிகமாகி காட்டு எல்லையோரம் இருந்தவர்களையும் பிடித்து உண்ண ஆரம்பித்து விட்டான். இதனால் மன்னர் மனம் வேதனை அடைந்த

வைகாசி விசாகத் திருநாள்!

Image
வைகாசி விசாகத் திருநாள்! உமா கோமள ஹஸ்தாப்ஜ ஸம்பாவித லலாடகம் ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம்! முருகன் குமரன் குகனென்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்றருள்வாய்! பொரு புங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண்குண பஞ்சரனே. இன்று வைகாசி விசாகத்திருநாள் முருகன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். பால்குடம், காவடி எடுத்து தமிழ் கடவுள் முருகனை பக்தர்கள் வழிபடும் சிறப்பான நாள் வைகாசி விசாக நன்னாள்!        சூரபத்மன் தேவர்களை கொடுமைப் படுத்தி இந்திர லோகத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். தேவர்கள் அனைவரும் தங்களின் துன்பத்தை போக்கும் படி படைப்புக் கடவுள் பிரம்மனை நாடினர். வேதங்களின் பிறப்பிடமான பிரம்மன் அவர்களுக்கு அபயம் தந்து, தேவர்களே! உங்களாலோ என்னாலோ சூரபத்மனை அழிக்க முடியாது. ஆனால் நான் சொல்லும் ஆலோசனைப் படி நடந்தால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றார்.    அது என்ன? என்று அவரை ஆவலோடு நோக்கினர் தேவர்கள். சிவகுமாரனால்தான் சூரபத்மனுக்கு அழிவு என்பது எழுதப்பட்ட விதி! நீங்கள் மன்மதனை நாடுங்கள்! அவனது மன்மத பாணம் நிஷ்டையில் இருக்கும் சி

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 5

Image
   சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 5 1.நம்ம தலைவரு ரொம்ப புத்திசாலின்னு எப்படி சொல்றே?  அவர் கட்சிக்கு ஆளும்கட்சின்னு பெயர் வெச்சிருக்காரே!                                         எம். மேகநாதன். 2. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சுன்னு சொன்னதுக்கு தலைவர் என்ன சொல்றார்?   நல்லா மோந்து பார்த்துட்டு சொல்ல சொல்லுங்கன்னு சொல்றார்.                                 எம். செல்லையா. 3.இதை ரொம்ப நல்ல பாம்புன்னு எப்படி அடிச்சி சொல்ற? சட்டையை உரிச்ச பிறகும் பனியன் தெரியுது பார்!                                               பி. கருப்பையா. 4.மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பையன் இருக்கற விஷயத்தை நீங்க ஏன் சொல்லலை? மாப்பிள்ளை பையன் அழகா இருப்பான்னு முதல்லயே சொன்னேனே கவனிக்கலையா?                                                அ. பேச்சியப்பன். 5.வேலூர் ஜெயில்ல இருக்கற தலைவர் பழமொழியை மாத்தி சொல்றாரா? எப்படி?   புழலின் அருமை வேலூரில் தெரியுதுங்கிறாரு!                                 ராம் ஆதிநாராயணன். 6.கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் சீர்வரிசைக்கு வரிவிதித்து

ஒரு காலை இழந்த கைப்பந்து வீராங்கணை அருணிமா : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

Image
காத்மாண்டு: ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால், ஒரு காலை இழந்த இளம் பெண், அருணிமா சின்கா, உலகின் மிக உயரமான சிகரம், எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்துள்ளார்.உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், அருணிமா சின்கா, 25. தேசிய அளவில், கைப்பந்து போட்டிகளில் பங்கேற்றவர். 2011ம் ஆண்டு, லக்னோவிலிருந்து, டில்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.ரயிலில் நுழைந்த கொள்ளையர்கள், பயணிகளிடம் இருந்து உடமைகளை திருடினர். அவர்களை தீரத்துடன் எதிர்த்து போராடிய அருணிமாவை தாக்கிய கொள்ளையர்கள், ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி எறிந்தனர்.அடுத்த தண்டவாளத்தில் சென்ற ரயில் மோதி, பலத்த காயமடைந்த அருணிமா, ஒரு காலை இழந்தார். முழங்காலுக்கு கீழே, அவரின் ஒரு கால் வெட்டி எடுக்கப்பட்டது. இடுப்புப் பகுதியில் படுகாயமடைந்த அவர், பல மாதங்கள், படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றார்.பிறர் தன்னை பரிதாபமாக பார்ப்பதை தவிர்க்க, மிகப் பெரிய சாதனையை செய்ய வேண்டும் என நினைத்த அவர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, மலையேற்றக் குழுவில் சேர்ந்து, பயிற்சி பெற்றார்.எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய, உலகின் முதல் இந்தியப் பெண் என போற்றப்பட்ட, பச்சேந்திரி ப

பிறரை நம்பி வாழ்பவரிடம் இருப்பது எது? பொன்மொழிகள்!

Image
ஆன்றோர் பொன்மொழிகள்! உள்ளதை சொன்னால் பொல்லாதவன்: சொல்லாமல் இருந்தால் அறிவில்லாதவன்.                                                          -வால்டேர் மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான் எங்கும் விலங்கு பூட்டப்பட்டு காணப்படுகிறான்                                                            -ரூசோ சரித்திரத்தை உண்டாக்கும் மனிதர்களுக்கு அதை எழுத நேரம் கிடைப்பது இல்லை!                                                     -மெட்டர்னிக் முதலில் நீங்கள் நல்லவனாய் இருங்கள்: கெடுதல்கள் பறந்துபோய்விடும்: உலகம் முழுவதும் மாறிவிடும்                                                      -விவேகானந்தர். வெற்றி பெறுபவர்களின் முக்கிய பண்புகளில் தன்னம்பிக்கையும் ஒன்று.                                                       கார்ல் மார்க்ஸ் தீமைகள் உங்களை அணுகாதிருக்க உங்களது எண்ணங்களில் தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.                                                  -சாக்ரடீஸ் உங்களால் நம்பிக்கையுடன் கனவு காணமுடியும் என்றால் கனவில் கண்டதை நிஜத்திலும் செயல் வடிவில் செய்